விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளையொட்டி வெண்ணந்தூர் பேரூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகில் மது & போதை ஒழிப்பு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பிறந்தநாளையொட்டி வெண்ணந்தூர் பேரூர் பகுதிகளில் கட்சியின் கொடியேற்றி இனிப்பு வழங்கி தமிழர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது.
வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் க.நடராஜன்(எ)நாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சேலம்-நாமக்கல் மண் டல துணை செயலாளர் வ.அரசன் சிறப்புரை ஆற்றினார்
இதில் வெண்ணந்தூர் ஒன்றிய பொருளாலர் பழ.செங்கோட்டுவேல், ஒன்றிய துணை செயலாளர் பெ.செந்தில், விவசாய பாதுகாப்பு இயக்கம் சுப்ரமணி,மகளிர் விடுதலை இயக்கம் கஸ்தூரி, பிரியா, அத்தாயி, சுகன்யா, திராவிடர் கழகம் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், திராவிடர் விடுதலைக் கழகம் பொருப்பாளர் பெரியண்ணன் சசிக்குமார், துரைசாமி, கந்தசாமி, ஆறுமுகம், கர்ணா, தருன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.