நாமக்கல், ஜூலை.31: திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேசிய அளவிலான சைபர் பாதுகாப்பு இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.
இணையப் பாதுகாப்புத் துறையில் உள்ள முக்கியமான சிக்கல்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைத்தது இதனை நடத்தினர். சைபர் செக்யூரிட்டி ரிசர்ச் கவுன்சில் மற்றும் இந்தோ ரஷியன் ரிசர்ச் கவுன்சில் ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து இம்மாநாடு நடைபெற்றது.
முன்னதாக இரண்டு நாள் உச்சி மாநாட்டை கல்லூரி நிர்வாக இயக்குனர் வி.மோகன், முதல்வர் எம்.வெங்கடேசன் ஆகியோர் துவக்கி வைத்துப் பேசினர். தேசிய சைபர் செக்யூரிட்டி ரிசர்ச் கவுன்சில்துணைத் தலைவர் காளிராஜ் நாயுடு மாநாட்டின் நோக்கம் குறித்து இதில் பேசினார். திருச்செங்கோடு வட்ட இரண்டாம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஆர்.மாலதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உண்மையான வழக்கு ஆய்வுகளைப் பகிர்ந்துகொண்ட நீதிபதி ஆர்.மாலதியின் அமர்வு மாணவர்களிடம் பேசுகையில் “உங்கள் ஐந்து புலன்களால் நீங்கள் உணராத யாரையும் நம்ப வேண்டாம்” என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். சைபர் குற்றங்கள் கட்டுப்படுத்துவதில் காவல்துறை மற்றும் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்தார். இணைய அச்சுறுத்தல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் தனிப்பட்ட பொறுப்பை அவர் வலியுறுத்தினார்.
மேம்பட்ட தொழில்நுட்ப அமர்வுகள்:
உச்சிமாநாட்டில் இந்த துறையில் உள்ளபத்துக்கும் மேற்பட்ட முக்கிய நிபுணர்களால் மேம்பட்ட தொழில்நுட்ப அமர்வுகள் இடம் பெற்றன. இதில்நெறிமுறை ஹேக்கிங் முதல் AI ஒழுங்குமுறை இணக்கம் வரையிலான பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய இணையப் பாதுகாப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் இதில் பங்கேற்று வல்லுநர்கள் பேசினர். இதில் பல்வேறு கல்லூரியின் மாணவர்கள் பங்கேற்று தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.