Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக கூட்டத்தில் கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக கூட்டத்தில் கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பாஜக மாநில துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, ஆகியோர் சிறப்புரையாற்றிப் பேசினர். இதில் கட்சியின் மாவட்டத் தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் டாக்டர் கே.பி.ராமலிங்கம் பேசியது: பாஜக மக்களின் சேவைக்கான கட்சியாகும். மக்களின் கோரிக்கைகளை கையில் எடுத்து அதை நிறைவேற்றி தரும். ஆனால் மக்கள் தேர்தல் நேரத்தில் ஆதரிக்கவில்லை. பாஜகவுக்கு வாக்கு செலுத்தவில்லை என்றாலும் மக்களின் பிரச்னைகளை கையில் எடுத்து தீர்வு காணும். கரோனா நேரத்தில் 1500 ரூபாய் பிரதமர் வங்கிக் கணக்கில் செலுத்தினார். பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவத் திட்டத்தில் 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 19 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர். இது போன்ற நலத்திட்டங்களை மறந்து விட்டு, தேர்தலில் காசுக்கு வாக்களிக்கும் போக்கு உள்ளது.

சேலம் – கரூர் இருப்புப்பாதை போலவே, ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நாமக்கல் வழியாக அரியலூர்-பெரம்பலூர் வரை புதிய இருப்பு பாதை அமைத்து தரப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்களித்தோம். விவசாய விளைபொருள் ஏற்றுமதி நிலையத்தை இப்பகுதியில் அமைப்போம் என வாக்குறுதி அளித்தோம்.

2014 இல் ஒரு எம் பி, 2019-ல் ஒரு எம்பி கூட கிடையாது. இன்றைக்கும் அதே நிலைதான் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்காக அளித்துள்ளார். மத்திய அரசை ஒன்றிய அரச என விமர்சிக்கும் திமுக அரசு நிதிக்காக ஏன் மத்திய அரசை எதிர்பார்த்து காத்துள்ளது? 7 ஆண்டுகள் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் பங்கு பெற்ற பேசி உள்ளேன். நிதிநிலை அறிக்கை குறித்து எந்த வித புரிதலும் இல்லாமல், முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் பேசி வருகின்றனர்.

20 ஆயிரம் கோடி ஆந்திர மாநிலத்திற்கு பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்குதான் அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
39 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு திமுக எதுவும் செய்ய முடியாது. புதிய தலைநகர் அமராவதி ஏற்படுத்துவதற்கு 15 ஆயிரம் கோடி மத்திய ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் புதிய தலைநகர் அமைத்தால் அதற்கான நிதியை நாங்கள் வாங்கி தருகிறோம்.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குட்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதிலிருந்து திசை மாற்றுவதற்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார். 2000 கோடி ரூபாய் போதை மருந்து தொழில் செய்பவர்கள் இடமிருந்து அவர்கள் பணத்திலே தமது மருமகள் பெயரில் முதல்வர் படம் எடுப்பது நியாயம் இல்லை. தமிழகத்தில் திறனற்ற ஆட்சி நடத்தப்படுகிறது. போதை பொருள் விற்பவர்களிடமிருந்து பெறுகின்ற பணத்தை வைத்து இந்த ஆட்சி நடத்தப்படுகிறது. பொதுமக்களிடம் வாக்குக்கு பணம் அளித்து ஏமாற்றி விட்டனர். நியாயமான தர்மத்தின் பாதையில் செல்லும் ஆட்சி பாஜக மட்டுமே.

திமுகவின் ஊழலை மக்களிடம் எடுத்து கூறி ஆட்சி கட்டிலில் இருந்து அவர்களை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் ஆகும். பொதுமக்களே பணத்தை எடுத்து அதையே தேர்தல் பட்டுவாடா செய்கிறது. இடையில் இதுவரையிலும், அது எப்படி வரினும் அதை சந்திக்கிற ஆற்றல் படைத்த மறவர் கூட்டம் தான் பாஜக. என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்து படிப்படியாக முன்னேறுவோம் .வரும் 2026-ம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சிக்கட்டில் பாஜக அமையும் என்றும் பாஜக மாநில துணை தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம் பேசினார்.

தொடர்ந்து V.P. துரைசாமி: பட்ஜெட் அறிவிப்பில் தமிழ்நாடு பெயர் இல்லை எனத் திமுகவினர் கூறுவது ஏற்கத்தக்கது இல்லை.

கடந்த 10 ஆண்டு காலத்தில் மோடி அரசாங்கம் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை, அந்தத் துறைக்கே செலவழிக்கப்பட்டிருக்கிறதா என utilisation சான்றிதழ் சட்டசபையில் முதலமைச்சர் பதில் சொல்வாரா? கடந்த அரசு வைத்த 4.50 லட்சம் கோடி கடனை கட்டுவதற்கும் வழி கட்டுவதற்கும் வாக்களிக்க வேண்டுமென முதல்வர் வாக்குறுதி அளித்தார். தமிழ்நாடு அரசு, கடந்த 3 ஆண்டுகளில் 9 லட்சம் கோடிக்கு கடன் பெற்றுள்ளது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், செயல்படும் மாநில அரசு, மத்திய அரசிடம் வாங்கிய நிதிக்கான செலவு பயன்பாட்டு செலவு சான்றிதழை மத்திய அரசிடம் தமிழ்நாடு முதல்வர் வழங்க வேண்டும். பல கோடி ரூபாய் வழங்கும் மத்திய அரசு மாநில அரசு செய்த பயன்பாட்டு செலவினங்களை தெரிந்து கொள்ள உரிமை உள்ளது.

தமிழக முதல்வர் தமது கருத்துக்களை நிதி ஆயுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்திருக்க வேண்டும். மோடி அரசு தமிழ்நாடு அரசின் வரவு செலவு கணக்கு கேட்பார்கள் என்ற காரணத்தினால் தான் முதல்வர் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்பது பாஜகவின் குற்றச்சாட்டு ஆகும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகள் மருத்துவ கல்வி பெறுகின்ற வாய்ப்பை, நீட் தேர்வு மூலமாக, மத்திய அரசு ஏற்படுத்தி வந்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

அடுத்து வரும் 22 மாதங்களில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்:

இதனையடுத்து கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசியது: மாநில திமுக அரசு திறனற்ற ஆட்சியாக உள்ளது. அரசு பணியாளர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாத நிலைமைக்கு தமிழ்நாடு சென்றுவிட்டது. தமிழ்நாட்டின் கடன் அளவு 9 லட்சம் கோடியாக உள்ளது. மாநிலத்தை கடன்கார மாநிலமாக திமுக அரசு வைத்துள்ளது. குஜராத்திற்கு பிரதமர் மோடி முதலமைச்சராக பதவி ஏற்று, 17 நதிகளை ஒருங்கிணைத்து, தடுப்பணைகள் கட்டியதால் ஆற்று நீர் சேமிக்கப்படுகிறது. ஆனால் திமுக அரசு நீர் மேலாண்மை பணியில் கவனம் செலுத்தவில்லை. அதனால் மழை நீர் நேரடியாக கடலில் சென்று கலந்துவிடுகிறது. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் கர்நாடகாவில் ஹேமாவதி, ஹெரங்கி அணைகள் கட்டப்பட்டுவிட்டன. காவிரி பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருந்தது திராவிட மாடல் அரசாங்கம்.

மத்திய அரசு, சென்னை மாநகர் வெள்ளத் தடுப்புக்காக ரூபாய். 5000 கோடி ஒதுக்கீடு செய்தது. இதுபோன்ற மத்திய அரசு ஒதுக்கிய நிதிகளுக்கு பயன்பாட்டு சான்றிதழ் மத்திய அரசுக்கு தராததால்தான், நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ளவில்லை என்பதை உண்மையாகும். மத்திய அரசின் 48 லட்சத்து 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதி திட்டங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வெறும் கூச்சல் போடுவதே இந்தி கூட்டணியின் செயலாக உள்ளது. எந்த புரிதலும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் பேசி வருவது ஏற்கத்தக்கது அல்ல.

2013 ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மொத்த மதிப்பு 16 லட்சம் கோடி ஆகும். ஆனால் இன்று மத்திய பாஜக அரசு 48 லட்சத்தி 21 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட் ஆக இது உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற சீர்கெட்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. கள்ளச்சாராய சம்பவமும் அதிகரித்து உயிர்பலி ஏற்பட்டுள்ளது. கஞ்சா, போதை, கள்ளச்சாராயம் போன்ற தொழிலில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். கொலை சம்பவங்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுவதில்லை. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதாய கொலைகள் அதிகரித்துவிட்டன. இவற்றையெல்லாம் திமுக அரசு தடுக்க தவறிவிட்டது. அந்த ஜூன் மாதம் 30 நாளில் 131 கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில்பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விட்டது. இதுவரை மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது. எதிர்கட்சியாக இருந்தபோது போராடிய திமுக தற்போதைய மின்கட்டணத்தை உயர்த்துகிறது?

தமிழகத்தில் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ள நிலையில், பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருவதாக தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்த முடியுமா? கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை மூன்று லட்சம் கோடி கடனை வாங்கி மிக மோசமான பொருளாதார சூழ்நிலைக்குள் தமிழகத்தை திமுக அரசு தள்ளிவிட்டது. 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும். விவசாயிகளுக்கு நன்மை செய்யாத அரசை ஜனநாயக முறையில் நாம் அகற்ற வேண்டும். இதனால் வரை திராவிட மாடல் ஆட்சியை பார்ப்பது போதும் இனி பாஜக ஆட்சியைப் பார்க்கிறோம்.

இந்தியாவின் பொருளாதாரத்தை 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேற்றிய பாஜகவுக்கு தமிழக பொருளாதாரத்தை செம்மைப்படுத்தி தமிழகத்தை முன்னேற்ற முடியும். தமிழின் பெயரால் தமிழகத்தை வஞ்சிக் கொண்டிருக்கும் ஆட்சியை முடிவு கட்ட முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எச். ராஜா பேசினார். இந்தப் பொதுக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!