நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அங்களாம்மன் கோவிலில் ஆடி மாத பெளர்ணமியை தொடர்ந்து ஆடி.5-ம் நாளான (ஜூலை.21) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு மகாதீபாராதனை நடைபெறும். பின்னர் ஶ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் உட்பிரகாரத்தில் ரதத்தில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மன் அருள் பெற வேண்டும் என கோவில் பூசாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் முறை பூசாரிகள் சுப்பிரமணியம் செல்வராஜ், பிரபு செல்வராஜ் ஆகியோர் செய்துவருகின்றனர்.
அங்காளம்மன் கோவிலில் ஆடி பெளர்ணமி சிறப்பு ஆராதனை
RELATED ARTICLES