நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியில் 100க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மின் கம்பத்தின் மேல் பகுதியில் பீஸ் கேரியர் பெட்டியில் இருந்து, பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வெளியேறியது.
அச்சமடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், மின்சார துறையினருக் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக மின்சாரத்தை துண்டிப்பு செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.