நாட்டின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்றுள்ளதை தொடர்ந்து நாமக்கல், ராசிபுரம் நகரில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி, 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பதை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாஜகவின் சார்பில் நாமக்கல் நகரில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதே போல் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே, பாரத மாதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டு, பதவி ஏற்பு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பாஜகவினர், பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.