Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்நாமக்கல் திமுக வேட்பாளர் வெற்றிக்கு கை கொடுத்த கிழக்கு மாவட்ட திமுக

நாமக்கல் திமுக வேட்பாளர் வெற்றிக்கு கை கொடுத்த கிழக்கு மாவட்ட திமுக

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வி.எஸ்.மாதேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார். சங்ககிரி, பரமத்திவேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும், நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் கூடுதல் வாக்குகளே வெற்றிக்கு காரணம் என தெரியவந்துள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஒருங்கிணப்பில் தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ., ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ.,பொன்னுசாமி உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய நகர நிர்வாகிகள், தொண்டர்களின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்பதை வி.எஸ்.மாதேஸ்வரன் பெற்ற வாக்குகள் தெரிவித்துள்ளன.

அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணியைவிட 29887 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்ற இவர், பரமத்திவேலூர், சங்ககிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்றிருந்தாலும், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளதால் வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம் (எஸ்சி), சேந்தமங்கலம் (எஸ்டி), திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய தொகுதிகளும், சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி சட்டமன்றத் தொகுதியும் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அடங்கும். ஆண் வாக்காளர்கள் 708317 பேர், பெண் வாக்காளர்கள் 744087 பேர், பிற வாக்காளர்கள் 158 பேர் என மொத்தம் 1452562 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 553702 பேர், பெண் வாக்காளர்கள் 582290 பேர், பிற வாக்காளர்கள் 77 பேர் என மொத்தம் 1136069 பேர் வாக்களித்திருந்தனர். இதில் மிக குறைந்த அளவாக நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் 74.27 சதவீத வாக்குகளும், அதிக அளவாக சங்ககிரி தொகுதியில் 81.80 சத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில், சட்டமன்ற வாரியாக அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணியை விட திமுக வேட்பாளர் நாமக்கல் தொகுதியில் 12190 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இதே போல் சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட 11183 வாக்குகளும், ராசிபுரம் தொகுதியில் 4517 வாக்குகளும் கூடுதலாக பெற்றுள்ளார். இதே போல் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் 9824 வாக்குகள் கூடுதலாக பெற்றார். அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணி தனது சொந்த சட்டமன்றத் தொகுதியான பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதியில் 4978 வாக்குகளும், சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் 3434 வாக்குகளும் அதிகம் பெற்றுள்ளார். திமுக கூட்டணியின் வேட்பாளரின் வெற்றிக்கு நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அக்கட்சி பெற்ற கூடுதல் வாக்குகளே கைகொடுத்துள்ளன. இதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுகவின் கட்சி தொண்டர்களின் தேர்தல் நேர உழைப்பே காரணம் என்று வெற்றியை கொண்டாடிய திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்பியுமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியை பல்வேறு இடங்களில் கொண்டாடினார்.

இதே போல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நி்ரவாகிகளும் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் தொகுதியில் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் (தபால் வாக்கினையும் சேர்த்து)

வி.எஸ்.மாதேஸ்வரன் (திமுக ) – 466377
ராஹா சு.தமிழ்மணி (அதிமுக) – 436490
கே.பி.ராமலிங்கம் (பாஜக) – 105803
ஜி.கனிமொழி (நாதக) – 96259.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!