ராசிபுரம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற மினிலாரி மின் கம்பத்தில் உரசி தீவிபத்து ஏற்றப்பட்டு எரிந்து சேதமடைந்தது. புதுச்சேரி பகுதியில் இருந்து வைகோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.
நாரைக்கிணறு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக இந்த வைக்கோல் கட்டுகள் கொண்டு வரப்பட்டன. லாரியை ஓட்டுநர் சண்முகம்(42) ஒட்டிச்சென்றார். இந்த லாரி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைகிணறு பிரிவு அருகே உள்ள 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 240 வைகோல் கட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். அப்போது லாரி நாரைகிணறு பிரிவு அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் விவசாய நிலம் வழியாக மினி லாரி சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள மின்சார கம்பியில் உரசியதில் வைகோல் தீப்பற்றியுள்ளது.
ஓட்டுனர் தீப்பற்றியதை கண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு பார்த்தபோது காற்றினால் தீ வாகனம் முழுவதும் மளமளவென பரவியதில் வாகனத்தில் இருந்து பின்னர் அப்பகுதியினர் ராசிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக ஆயில்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.