தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சர்வதேச பட்டினி தினத்தை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உணவு வழங்கப்பட்டது. ராசிபுரம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.
சர்வதேச பட்டினி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28 ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த பட்டினி தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் பல்வேறு சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பட்டினி இல்லாத உலகை உருவாக்கும் நோக்கில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அதன்படி தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய்-யின் ஆணக்கிணங்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்த் ஆலோசனைப்படி
சர்வதேச பட்டினி தினத்தை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டம் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு நாள் இலவச மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன்படி ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பழைய பஸ் நிலையம் அருகில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ.ஜெ.செந்தில்நாதன் தலைமையில் ஏழை எளியோருக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு கேசரி ,சாம்பார், ரசம், மோர், அப்பளம்,முட்டை, வடை,குடிநீர் பாட்டில்கள் போன்றவை வழங்கப்பட்டது. இதே போல் திருச்செங்கோடு பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
இதேபோல் சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி வேலூர், போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நண்பன் அ.பிரபு, தமிழன்,K.ராஜ்குமார் மாவட்ட அமைப்பாளர் K.விஜயகாளியப்பன் அவைத் தலைவர் பிரதீஷ் பிரபு, மாவட்ட பொருளாளர் M.விக்னேஷ், இராசிபுரம் நகர தலைவர் M.P.பாக்கியராஜ், செயலாளர் கௌதம்,நிதின்குமார், நகர் இளைஞர் அணி தலைவர் சுதர்சனன், பொருளாளர் சூர்யா, ராசிபுரம் நிர்வாகிகள் J.J.R.பிரகாஷ்,K.சுகுமார், வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய தலைவர் M.M.மணிகண்டன் பிரேம்குமார், ராசிபுரம் ஒன்றிய தலைவர் தாமரைக்கண்ணன் அஜித்,விஷ்ணு, சீராப்பள்ளி பேரூர் நிர்வாகிகள் பகவதி,மணிகண்டன், தீபக்,
நாமக்கல் மேற்கு மாவட்ட தொண்டரணி மணவாளன், நாமக்கல் கிழக்கு மாவட்ட இணையதளம் K.ஜீவா மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் என திரளாக பலர் கலந்து கொண்டனர்.