ராசிபுரம் அருகேயுள்ள நாரைகிணறு பகுதியில் பக்தர்களை காட்டோரி உலக்கு, முறம், சாட்டை கொண்டு அடிக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள நாரைகிணறு பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். இதனை தொடர்ந்து கடந்த சித்திரை மாதம் 4-ம் தேதி பூச்சாட்டுதளுடன் விழா தொடங்கியது. நாள் தோறும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார். விழாவில் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்றவை நடத்தி நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். விழாவில் முக்கிய நிகழ்வான காட்டேரி வேடமணிந்து வந்த ஒருவர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களை முறம், உலக்கை, சாட்டையால் பக்தர்களை அடிக்கும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியானது ஏரிக்கரையில் இருந்து தொடங்கி ஊரின் பல்வேறு பகுதிகளின் வழியாக சென்று இறுதியாக கோயிலை சென்று அடைந்தனர். இதில் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காட்டேரியிடம் அடி வாங்கிச் சென்றனர். விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
நாரைக்கிணறு கிராமத்தில் பக்தர்களை உலக்கு, முறம், சாட்டை கொண்டு அடிக்கும் காட்டோரி
RELATED ARTICLES