நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992 – 93ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கல்வி போதித்த ஆசான்கள் காலில் விழுந்து மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆசி பெற்ற நெகிழ்ச்சி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவரான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., முன்னாள் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று நினைவு பரிசளித்து கெளரவப்படுத்தினார்.
இதில் பள்ளியில் பயின்ற மாணவர்களும், அப்போது கல்வி போதித்த ஆசிரியர்களும் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி நாட்களின் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். மேலும் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்து, பரிசளித்து கெளரவப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளியின் முன்னாள் மாணவரான நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக., செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்று சக முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுடன் பழைய நினைவுகளை கலந்துரையாடினார். மேலும் ஆசிரியர்கள் அப்போதைய கண்டிப்பு, கற்பிப்பும் முறைகளை நினைவு கூறிப் பேசினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இதில் பங்கேற்ற அப்போதைய ஆசிரியர்கள் பாடம் நடத்த, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் தங்களின் பழைய ஆசிரியர்கள் பாடம் நடத்தியதை கவனித்தனர். இதனை தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக அவர்களின் ஒவ்வொரு ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்று நினைவு பரிசளித்துப் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசியர் வரதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.