Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் பஸ் நிலையம் முன் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு

ராசிபுரம் பஸ் நிலையம் முன் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு

ராசிபுரம் நகர திமுக சார்பில் கோடை வெய்யிலையொட்டி பொதுமக்கள், பயணிகள் பயன்பாட்டிற்காக குடிநீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழக முழுவதும் கடும் வெயில் தாக்கம் இருந்து வருவதையொட்டி அனைத்து பகுதிகளிலும் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட வேண்டும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார். இதன்படி ராசிபுரம் நகர திமுக சார்பில் புதிய பஸ் நிலையம் முன்பாக குடிநீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. ராசிபுரம் நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில், கிழக்கு மாவட்டத் திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்று பொதுமக்கள், பயணிகளுக்கு குடிநீர், தர்பூசணி பழங்கள், நீர்மோர், இளநீர், குளிர்பானம் போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர மன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கர், நகர மன்ற உறுப்பினர்கள் ஆர்.விநாயகமூர்த்தி, சாரதி, நடராஜன் ,பி ரபு, பழனிச்சாமி, வார்டு செயலாளர்கள் பி.சக்திவேல், கேசவன், தங்கதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!