Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம்ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் வழங்கல்

ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் வழங்கல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு ராசிபுரம் அனைத்து நெய் உற்பத்தியாளர்கள் சார்பில் புவிசார் குறியீடு பதிவாளரிடம் விண்ணப்பித்துளளதாக புவிசார் குறியீடு சட்ட வல்லுநரும், தமிழ்நாடு புவிசார் குறியீடு கண்காணிப்பு அலுவருமான ப.சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார். கோவை வேளாண் கல்லூரியின் துணை அமைப்பான நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் மதுரையில் செயல்பட்டு வரும் வேளாண்மை வர்த்தக வழிகாட்டு அமைப்பு இதற்கான விண்ணப்பத்தை பதிவாளரிடம் அளித்துள்ளது என்றும் சஞ்சய்காந்தி குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பும் புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் வழங்கலாம் என்ற அடிப்படையில் ராசிபுரம் நெய் உற்பத்தியாளர்கள் சார்பில் இந்த விண்ணப்பத்தை புவிசார் குறியீடு பதிவாளருக்கு விண்ணப்பித்துள்ளது. ராசிபுரத்தில் செயல்படும் நெய் உற்பத்தியாளர்களுக்கான பதிவு பெற்ற எந்த ஒரு சட்டப்பூர்வ அமைப்பும் விண்ணப்பதாரர்களாக இணைய விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தையும் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் ப.சஞ்சய்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ராசிபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நெய் தமிழக அளவில் பிரசித்தி பெற்றது என்பதும், இப்பகுதியின் நெய் உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக நெய்க்கு புவிசார் குறியீடு கேட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விண்ணப்பத்தை பரிசீலித்து புவிசார் குறியீடு பரிந்துரை குழுவின் ராசிபுரம் பகுதியில் நேரடி ஆய்வுக்கு பின்னர் சட்டப்பூர்வ புவிசார் குறியீடு வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டும் பணியாரக்கல் உள்ளிட்ட பல்வேறு கல் உற்பத்தி் பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!