Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்நாமக்கல் மாவட்டத்தில் “கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்”

நாமக்கல் மாவட்டத்தில் “கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்”

நாமக்கல் மாவட்டத்தில் “கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்” 15 நாட்கள் நடத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து கால்பந்து, வில்வித்தை, தடகளம், வாள்சண்டை, இறகுபந்து, கையுந்துபந்து விளையாட்டுப் போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. அதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர் / மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம். கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர் / மாணவரல்லாதோர்கள் காலை 6.00 மணி முதல் 8.00 வரையிலும் மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் நடத்தப்படும். அதற்கு பயிற்சி கட்டணம் தலைமையகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.200 வீதம் ஆன்லைன்/ Pos machine மூலமாக மட்டுமே பெறப்படும். எக்காரணம் கொண்டும் ரொக்கமாகப் பெறப்படாது. மேலும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரது கைபேசி எண். 7401703492 மற்றும் கையுந்து பயிற்றுனர் அ.சிங்குதுரை கைபேசி எண். 85086 41786 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் அனைவரும் ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்பித்தல் வேண்டும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள விளையாட்டுக்களின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது கீழ் குறிப்பிட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்லைவர் மருத்துவர் ச.உமா, தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!