Tuesday, December 24, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஆன்மிகம்ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் : பூங்கரகத்துடன் வடம் பிடித்து தேரிழுத்த பக்தர்கள்

ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் : பூங்கரகத்துடன் வடம் பிடித்து தேரிழுத்த பக்தர்கள்

ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் திருக்கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
இக் கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடப்பது வழக்கம். இதன்படி ஏப்.15-ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியதையடுத்து, நாள்தோறும் தொடர்ந்து கருட வாகன சேவை, அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கஜலட்சுமி வாகனம், யானை வாகனம். புஷ்ப விமான வாகன ஊர்வலம், குதிரை வாகனம்உள்ளிட்ட வாகனங்களில் சாமி நகர்வலம் அழைத்து வரப்பட்டார்.

திருமஞ்சனம் உள்ளிட்ட சேவைகள் பல்வேறு கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டு வியாழக்கிழமை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவில் அர்ச்சகர் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாலை தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இத்தேரோட்டத்தை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.ரங்கசாமி, நகர திமுகச் செயலரும், அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான என்.ஆர்.சங்கர், நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், நகர காவல் ஆய்வாளர் கே.செல்வராஜூ, எஸ்.எம்.ஆர்.பரந்தாமன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பலரும் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

திருத்தேர் கவரைத்தெரு, கடை வீதி வழியாக இழுத்துச் செல்லப்பட்டது. தேரோட்டத்தில் பூங்கரகம் எடுத்தும், காளை ஆட்டம், மயிலாட்டம் போன்றவை முன் செல்ல திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!