Monday, March 30, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைமெட்டாலா லொயோலா கலை அறிவியல் கல்லூரி 11-வது ஆண்டுவிழா

மெட்டாலா லொயோலா கலை அறிவியல் கல்லூரி 11-வது ஆண்டுவிழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா லெயோலா கலை அறிவியல் கல்லூரியின் 11-வது ஆண்டுவிழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் அருட்தந்தை பொன்ரூபன் வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் அதிபர் அருட்தந்தை முனைவர் தோமினிக் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், தன்னம்பிக்கை, திறன் வளர்ப்பு, சமூக மாற்றத்திற்கான களமாக லொயோலா கல்லூரி குன்றின் மேலிட்ட தீபமாக ஒளிருகிறது என்றும் பேசினார். கல்லூரிச் செயலர் அருட்தந்தை முனைவர் டேனிஸ் பொன்னையா சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கி, கல்லூரியின் வளர்ச்சி குறித்துப் பேசினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜா. ஜோஸ்ப்பின் டெய்சி காணொலிக் காட்சி வடிவ கல்லூரியின் ஆண்டறிக்கையைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் ஸ்ரீ நரசுஸ் காபி நிறுவனம் மற்றும் வைசியா கல்லூரித் தலைவர் பி.சிவானந்தம் பங்கேற்று கல்லூரி ஆண்டு விழா மலரை வெளியிட்டுப் பேசினார். விழாவில் மாணவர்களிடையே பேசிய அவர், இந்த வாழ்வு உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைத் தந்துள்ளது. அனுபவங்களிருந்தும், அடுத்தவரிடமிருந்தும், தவறுகளிகளிலிருந்தும் வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். கடைசி வரை கற்றுக்கொள்ளும் மாணவராக இருங்கள். உங்களையும், தெய்வத்தையும் நம்புங்கள். அறநெறியோடும், தன்னம்பிகையோடு வெற்றி பயணத்தைத் தொடர வேண்டும். தாய் தந்தையை விட சிறந்த அனுபவசாலிகள் யாரும் இல்லை என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் கல்லூரியின் நிர்வாகத் துணை முதல்வர் பேராசிரியர் அமுதன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் லியோ தாகூர், முனைவர் ஆண்டனி மார்கஸ், பெனட்டிக் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!