Friday, November 21, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்கொமதேக பொதுச்செயலர் குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தவறான கருத்து:திசா கமிட்டி உறுப்பினர் கே.ரவிசந்திரன்...

கொமதேக பொதுச்செயலர் குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தவறான கருத்து:திசா கமிட்டி உறுப்பினர் கே.ரவிசந்திரன் பாஜகவிற்கு எதிர்ப்பு

நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் ராஜேஸ்குமார் கொ.ம.தே.க., பொதுச்செயலர் திரு.ஈஸ்வரன் குறித்து தவறான கருத்தை பதிவிட்டுள்ளார் என கொ.ம.தே.க, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும்,திசா கமிட்டி உறுப்பினருமான கே.ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
கோவை கூட்டு பாலியல் பலாத்காரத்தில் அந்தப் பெண் இரவு 11 மணிக்கு அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய காரணம் என்ன இது கலாச்சார சீரழிவு என்று திரு.ஈஸ்வரன் சொன்னார் என்றும், இதை அரசு விழாவில் எவ்வாறு சொல்லலாம். கொங்கு நாட்டை இவர் பாதுகாத்தாரா என்றெல்லாம் தன்னுடைய விளம்பரத்திற்காக ராஜேஸ்குமார் கருத்தை பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் அவரிடம் நான் கேட்கிறேன் . ஈஸ்வரன் அவர்களை விட இந்த கொங்கு மண்டலத்தை பாதுகாக்கும் தலைவர் வேறு யாராவது உண்டு என்று உங்களால் கைகாட்ட இயலுமா? கொங்கு மண்டலத்தில் எங்கு வளர்ச்சி திட்டம் வேண்டுமென்றாலும் எங்கு குறைகள் நடந்தாலும் அதை உடனடியாக தட்டிக் கேட்கும் ஒரே தன்னலமற்ற கொங்கு நாட்டின் தலைவர் ஈஸ்வரன் அவர்கள் தான். மத்தியில் ஆளும் கட்சியாக தாங்கள் இருந்தாலும் திருச்செங்கோடு சார்ந்த மாவட்டத்திற்கு உங்கள் கட்சியின் தலைவராக இருக்கும் நீங்கள் எத்தனை முறை சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து இந்த தொகுதிக்கு என்ன வேண்டும் என்று கேட்டு மத்திய அரசிடம் அல்லது உங்கள் மாநில தலைவர் மூலம் கோரிக்கை வைத்திள்ளீர்கள் என்பதை சொல்ல இயலுமா?

இதுவரை திருச்செங்கோடு வளர்ச்சியை பற்றி நீங்கள் வாய் திறந்தது உண்டா? எந்த அடிப்படையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் யாரை பற்றி குறை கூறுகிறோம் அவருடைய செயல்பாடு என்ன அவருக்கு மக்களிடம் என்ன செல்வாக்கு உள்ளது என்பதனை அலசி ஆராய்ந்து குறை சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் உங்களுடைய கட்சி நிர்வாகிகள் உங்களுடைய மக்கள் பிரதிநிதிகள் அரசு விழாவில் எவ்வளவு மோசமாக அரசியல் பேசி உள்ளார்கள் என்ற விவரங்களை தாங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டுமா! அல்லது தாங்களே தெரிந்து கொள்கிறீர்களா என வினா எழுப்புகிறேன்? எனவே இனி ஒரு முறை விமர்சிக்கும் முன் ஆராய்ந்து உண்மை தன்மையுடன் நாம் எவ்வாறு இந்த தொகுதி மக்களுக்கு வளர்ச்சிக்கு குரல் கொடுக்கிறோம் என்பதையெல்லாம் ஆராய்ந்து தங்களுடைய குரலை எழுப்ப வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!