கிட்கோவின் இணை அமைப்பான GBN நாமக்கல் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் மாதாந்திர வர்த்தக கூட்டம் நாமக்கல் கோல்டன் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. ஜிபிஎன் நாமக்கல் அமைப்பின் தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

செயலாளர் ஜோதிமணி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சி தொடக்கத்தில் ஜிபிஎன் உறுப்பினர்கள் தங்களின் நிறுவனம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.

அதனை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், பேரமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், வணிகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். மேலும் தமிழக அரசு அளித்துள்ள சேர்க்கை கட்டண சலுகையை பயன்படுத்தி வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்து பயன்பெற வலியுறுத்தினார். நிகழ்ச்சி முடிவில் ஜிபிஎன் பொருளாளர் மனோஜ் நன்றி கூறினார்.





