நாமக்கல் HIV Welfare Association சார்பில் நாமக்கல் தீரன் சின்னமலை மாளிகையில் நடைபெற்ற விழாவில் நாமக்கல் எம்பி., வி.எஸ்.மாதேஸ்வரன் சொந்த நிதியில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விவசாய அணி இணை செயலாளர் D.S.சந்திரசேகர் தலைமையில் எச்ஐவி பாதிக்கப்பட்ட 270 பேருக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், ஒருங்கிணைந்த தீரன் தொழிற்சங்க செயலாளரும், நாமக்கல் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளரும்,
BSNL ஆலோசனைக் குழு உறுப்பினருமான குரு இளங்கோ, நாமக்கல் தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் ராஜா, நாமக்கல் வடக்கு மாவட்ட இணை செயலாளர் ஜெயச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் T.R.ரமேஸ், சேந்தமங்கலம் சட்டமன்ற இளைஞரணி செயலாளர் ஜெகதீஷ், நாமக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தசாமி, ராசிபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.