ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் சேவை செயல்பாட்டிற்கு அதிக நன்கொடை நிதி வழங்கியவர்களுக்கான பாராட்டு விழா ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் இ.என்.சுரேந்திரன் தலைமை வகித்தார். ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் எஸ்.அன்பழகன், முன்னாள் உதவி ஆளுநர் கு.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ரோட்டரி மாவட்ட உடனடி முன்னாள் ஆளுநர் வி.சிவக்குமார், ராசிபுரம் ரோட்டரி சங்க உடனடி முன்னாள் தலைவர் எம்.முருகானந்தம் ஆகியோரின் சங்கத்தின் சிறந்த செயல்பாட்டிற்கும், அதிக பவுன்டேஷன் நிதி சேர்தமைக்கும் பாராட்டி நினைவுப் பரிசளித்து கெளரவிக்கப்பட்டனர். இதே போல் என்டோவ்மென்ட் டோனர் எஸ்.சத்தியமூர்த்தி, மேஜர் டோனர்களான எஸ்.பிரகாஷ், ஆர்.திருமூர்த்தி ஆகியோர் சேவை திட்டங்களுக்கு அதிக நிதி வழங்கியதற்கும், 2024-25-ம் ஆண்டின் சி்றந்த ரோட்டேரியனாக தேர்வு செய்யப்பட்ட பி.கிரேஷ்சரண் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் ரோட்டரி சங்கச் செயலர் ஏ.மஸ்தான், முன்னாள் செயலர் ராமசாமி, முன்னாள் தலைவர் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.