ராசிபுரம் நகர “ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்” சார்பில் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது .இதில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நகர தலைவர் க.தாளமுத்து தலைமை வகித்தார். இதில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுனர் ஏ. ராஜு அனைவரையும் வரவேற்றார். சங்கத் துணைச் செயலாளர் ஆர். நஞ்சப்பன் கூட்டத்தில் பேசுகையில் பணியில் ஓய்வு பெற்றவர்களை சங்கத்தில் புதிய வலியுறுத்திப் பேசினார். தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் பேரவையின் மாவட்ட செயற்குழு கூட்டம் செப்டம்பர் 13 ஆம் தேதி ராசிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் மாத கடைசி சனிக்கிழமையில்அறந்தாங்கியில் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய உறுப்பினராக சுகாதார மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் இணைந்துக் கொண்டார். சங்கத்தின் நகரச் செயலாளர் கே. சுப்பிரமணி, துணைச் செயலாளர் பி.பன்னீர்செல்வம், பொருளாளர் குணசேகரன் ,முத்துசாமி சோமசுந்தரம், மாணிக்கம், தங்கவேலு உட்பட பலர் பங்கேற்றுப் பேசினர். கே. ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
ராசிபுரம் நகர “ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்”
RELATED ARTICLES