ராசிபுரம் இன்னர் வீல் சங்கத்தின் கூட்டம் வித்தியாசமான முறையில் ரெயில் வண்டி பயணத்தில் நடத்தப்பட்டது. ராசிபுரம் இன்னர் வீல் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தொடர் வண்டி பயணமாக நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராசிபுரம் – கரூர் இடையை நாள்தோரும் இயக்கப்பட்டு வரும், பயணிகள் தொடர் வண்டியில் ராசிபுரம் இன்னர் வீல் சங்கத்தின் தலைவர் வழக்குரைஞர் சிவலீலாஜோதிகோபிநாத் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.

இன்னர் வீல் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பத்துடன் ராசிபுரம் ரயில் நிலையத்தில் தொடர் வண்டியில் கரூர் வரை பயணித்து மாதாந்திர கூட்டத்தை நடத்தினர். கூட்டத்தில் எதிர்கால சமுதாய சேவை திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் ரெயில் வண்டி பயணத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் சங்கத்தின் செயலர் மகாலட்சுமி ராஜா, பொருளாளர் ஸ்ரீதேவி ராஜேஸ், முன்னாள் தலைவர்கள் தெய்வானை ராமசாமி, சுகன்யா நந்தகுமார், மல்லிகா வெங்கடாஜலம், சுதாமனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.