Saturday, August 30, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்மீண்டும் மீண்டுமா? ராசிபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையர் மீண்டும் மாற்றம்

மீண்டும் மீண்டுமா? ராசிபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையர் மீண்டும் மாற்றம்

ராசிபுரம் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் சி.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ராசிபுரம் நகராட்சிக்கு நிரந்த ஆணையாளர் நியமிக்கப்படாமல் தொடர்ந்து பொறுப்பு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 5 மாதங்களில் மூன்று ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்நகராட்சிக்கு ஈரோடு மாநகராட்சியின் உதவி ஆணையாளர், பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டு சில மாதங்கள் பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகராட்சியின் ஆணையாளராக உள்ள கோபிநாத் ராசிபுரம் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டு பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவரும் மாற்றம் செய்யப்பட்டு குமாரபாளையம் நகராட்சியின் ஆணையராக உள்ள சி.ரமேஷ் ராசிபுரம் நகராட்சியின் பொறுப்பு ஆணையாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ராசிபுரம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்படாததால், நகரின் பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்படும் என்பதால் நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!