Saturday, August 30, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

மல்லசமுத்திரம் மஹேந்ரா தொழில்நுட்பக் கல்லூரியின் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி மகாத்மா காந்தி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவர் எம்.ஜி.பாரத்குமார் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் தொலைக்காட்சி நீயா நானா புகழ் கோபிநாத் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். இவ்விழாவில் பேசிய அவர்,
வாழ்க்கையில் நாம் எதைச் சாதிக்க வேண்டும் என்றாலும், முதலில் மனதில் ஒரு இலக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதை ஒருபோதும் கைவிடக் கூடாது. சவால்கள், தடைகள்,தோல்விகள் எல்லாம் வந்தாலும், அதைக் கடந்து செல்லும் மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் நம் பக்கம் வரும்.
மாணவர் வாழ்க்கையில் மிக முக்கியமானதாக நேர மேலாண்மை கடைபிடிக்க வேண்டும். நேரத்தை வீணாக்காமல், சரியாக திட்டமிட்டு பயன்படுத்தினால், கல்வியிலும், தனிப்பட்ட வளர்ச்சியிலும் சமநிலை ஏற்படும். மேலும், சிறிய வெற்றிகளை அடைந்து கொண்டே போங்கள். அப்படிப்பட்ட சிறிய சாதனைகள் தான் உங்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அந்த நம்பிக்கை தான் உங்களை பெரிய கனவுகளின் பக்கம் இட்டுச் செல்லும். அதே நேரத்தில், எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள். நல்ல சிந்தனை உங்களுக்கு நல்ல ஆற்றலை தரும். மனதில் நல்ல எண்ணம் இருந்தால், வாழ்க்கையையும் நல்ல திசைக்கு மாற்றலாம்.
ஒழுக்கம் என்பது வெற்றிக்கான முக்கியமான படிக்கட்டு. ஒழுக்கமான வாழ்க்கை உங்களை இலக்கை அடைய வழிநடத்தும். முயற்சியில் தோல்விகளை கண்டு அஞ்ச கூடாது. தோல்வி என்பது முடிவு அல்ல, அது ஒரு பாடம். அதிலிருந்து கற்றுக் கொண்டு மீண்டும் எழும்போது தான் உண்மையான வெற்றி உங்களை எதிர்கொள்கிறது. வெற்றி பெற்றவர்கள் எவரும் எளிதாக வெற்றி பெறவில்லை. ஆனால், அவர்கள் அனைவருக்கும் ஒரே பொதுவான குணம் உண்டு.கைவிடாமல் தொடர்ந்து முயன்றதே. அதைப் போல நீங்களும் முயற்சி செய்யுங்கள். வெற்றி பாதையை நிச்சயம் அடைவீர்கள் என்றார்.

விழாவில் கல்லூரி செயல் இயக்குனர் இரா.சாம்சன் ரவீந்திரன், கல்லூரி முதல்வர் இளங்கோ, புல முதல்வர் ராஜவேல், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!