Saturday, August 30, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்திருச்சியில் அடையாள முற்றுகைப் போராட்டம் - வணிகர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்டத்...

திருச்சியில் அடையாள முற்றுகைப் போராட்டம் – வணிகர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்டத் தலைவர் வேண்டுகோள்

திருச்சியில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி சில்லரை வணிகத்தின் மீதான கார்ப்பரேட் கபளீகரத்தை எதிர்த்து நடைபெறும் அடையாள முற்றுகை போராட்டத்தில் அனைத்து வணிகர்களும், இணைப்பு சங்கத்தினரும் கலந்து கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஜெயக்குமார் வெள்ளைய்யன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்சி, வயலூர் டி-மார்ட் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் அடையாள முற்றுகைப் போராட்டம் ஆக.30-ல் நடைபெற உள்ளது.

அண்மைக்காலமாக தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் பெருகி வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்து வருகின்றன. டிபார்ட்மெண்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், மளிகை வணிகம் என துவங்கிய இந்நிறுவனங்கள் தற்போது நடுத்தர மற்றும் சிறு குறு வணிகத்திலும் ஈடுபட்டு சில்லறை வணிகர்களுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் சில்லறை வணிகர்கள் முற்றிலுமாக அழியும் நிலை உருவாகி வருகிறது.

ஆகவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பாரம்பரிய இந்திய சில்லறை வணிகத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். இதனை சுட்டிக்காட்டும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை கண்டித்து திருச்சி, வயலூர் டி மார்ட் நிறுவனத்தை முற்றுகையிடும் மாபெரும் அடையாள முற்றுகைப் போராட்டம், வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற உள்ளது.

இது முற்றுகைப் போராட்டமாக மட்டுமல்லாமல், சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் போராட்டமாகவும், சில்லறை வணிகத்தை நிலை நிறுத்தும் போராட்டமாகவும், அகில இந்திய அளவில் கார்ப்பரேட் தீவிரவாதத்திற்கு எதிராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஓங்கி எழுப்பும் கண்டன குரலாகவும் இப்போராட்டம் இருக்கும்.

இம்மாபெரும் போராட்டத்தில் தமிழக முழுக்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திரளான வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள். நாமக்கல் மாவட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 2000 வணிகர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், மாவட்ட பேரமைப்பின் 51 இணைப்பு சங்கங்களின் தவைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து பேரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!