நாமக்கல் நகரில் தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் உருவப்படத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் டாக்டர் த.குமரவேல் தலைமையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் இளமுருகன், மாநகரச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, துணைச்செயலர், குமார் , மாவட்டப் பொறுப்பாளர் உமாமகேஸ்வரன், சிறப்பு அழைப்பாளர் மாநில துணை அமைப்புச் செயலாளர் ஹிட்டாச்சி சிவா , SDPI மாவட்ட பொது செயலாளர் ரஹ்மத்துல்லா , தனுஸ், அண்ணாமலை, வரதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதே போல், ராசிபுரம் சட்டப்பேரவைத்தொகுதி தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலர் வினோத் சேகுவேரா தலைமை வகித்தார். திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சி.ஆனந்தகுமார், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் சி.மாயவன், நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர், நகர்மன்றத்தலைவர் ஆர்.கவிதா சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று அலங்கரிக்கப்பட்ட ஒண்டிவீரன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.