திருச்செங்கோடு பருத்திப்பள்ளி பகுதியில், டாஸ்மாக் கடை பிரச்சனை தொடர்பாக செய்தி எடுக்கச் சென்ற நமது தேடல் நாளிதழ் பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில், எலச்சிபாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் முகிலன் அறிவித்துள்ளார்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் வெங்கடேசன் என்பவரை நேரில் சந்தித்த ஆறுதலுக்குரிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.