Monday, October 6, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்குமாரபாளையம் தனியார் கல்லூரி பேராசிரியர் மாணவர்களிடம் பணம் மோசடி - ஆட்சியரிடம் புகார் மனு

குமாரபாளையம் தனியார் கல்லூரி பேராசிரியர் மாணவர்களிடம் பணம் மோசடி – ஆட்சியரிடம் புகார் மனு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு தனியார் நர்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவர்களிடம் அதே கல்லூரியின் பேராசிரியர் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கல்லூரி மாணவர்கள் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் நேரில் சென்று திங்கள்கிழமை மனு அளித்தனர்.

தனியார் நர்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் 100-க்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் பணியாற்றி வந்த வளர்மதி என்ற பேராசிரியர் மாணவர்கள் சங்கத்தினை பதிவு செய்ய வேண்டும் என சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பணம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கல்லூரியிலிருந்து நீண்ட விடுப்பில் சென்றவர் திரும்பி வரவில்லையாம். இதனையடுத்து மாணவர்கள் குமாரபாளையம் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினரிடம் பணத்தை ஒப்படைத்து விடுவதாக கூறியுள்ளார். ஆனாலும் அவர் பணத்தை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இதனால் மாணவர்கள் ஆட்சியர் அலுவலகம் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு அளித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!