நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பெருக்கு ஆடி 18 முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் உற்சவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் உற்சவர் மற்றும் மூலவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

ராசிபுரத்தில் வல்வில் ஓரி விழா
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் வல்வில் ஒரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த வல்வில் ஒரி முழு உருவச் சிலை ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலை வல்வில் ஒரி மன்னன் கட்டியுள்ளதால், அவரது முழு உருவச்சிலை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 25-ம் ஆண்டாக வல்வில் ஒரிக்கு அபிஷேக வழிபாடு விழா நடத்தப்பட்டது. கோவில் அர்த்தகர் ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் தலைமயைில் நடைபெற்ற விழாவில், ஒரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் ஆராதனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பாமக மாவட்டச் செயலாளரும், வல்வில் ஓரி மேம்பாட்டு குழு தலைவருமான ஆ.மோகன்ராஜ், நகர வன்னியர் சங்க செயலாளர்
கே.கே.மாரிமுத்து, வ.யுவா ராமதாஸ்,கட்டநாச்சம்பட்டி மாரியப்பன், கணேசன், டிங்கர் சீனி, இன்ஜினியர் பழனிவேல்,பள்ளி தலைவர் செந்தில், கல்லூரி பேராசிரியர் முனைவர் ஆர்.சிவக்குமார், போஸ்ட் வரதராஜ், அரிசி ஆலை முருகேசன், மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், விழா குழுவினர், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.