விதைப்பந்து தூவல்:ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம் சார்பில் போதமலை அடிவாரப்பகுதியில் விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் இ.என்.சுரேந்திரன் தலைமையில், சங்கச் செயலர் மஸ்தான், ரோட்டரி உடனடி முன்னாள் தலைவர் எம்.முருகானந்தம், நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், நடராஜன், இன்னர் வீல் சங்கத் தலைவர் சிவலீலாஜோதி கோபிநாத், சாகிதா பானு உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு வகை விதைபந்துகளை மலைப்பகுதியில் தூவினர்.

இலவச ரத்த பரிசோதனை முகாம்:
ராசிபுரம் இன்னர் வீல் சங்கம் – ராசிபுரம் குமரன் மருத்துவமனையுடன் இணைந்து இலவச ரத்த பரிசோதனை முகாமினை நடத்தியது.
இம்முகாமில் சர்க்கரை அளவு பரிசோதனை, கொலஸ்ட்ரால் அளவு பரிசோதனை ,தைராய்டு பரிசோதனை, ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீடு போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைக்கு பின் இலவச சர்க்கரை நோய் மாத்திரைகள், ரத்த அழுத்த மாத்திரைகள், கொலஸ்ட்ரால் மாத்திரைகள், சத்து மாத்திரைகள் முகாமில் வழங்கப்பட்டது. இதில் இன்னர் வீல் சங்கத் தலைவர் சிவலீலாஜோதி கோபிநாத், செயலர் மகாலட்சுமி ராஜா, மருத்துவமனை மருத்துவர்கள் கே.குமரன், ஜி.அட்சயா செயலாளர் மகாலட்சுமி ராஜா, சுதா ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.