Saturday, August 2, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்நாமக்கல் கருங்கல்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்: நாமக்கல் எம்பி., வி.எஸ்.மாதேஸ்வரன் மத்திய அமைச்சர் கட்கரியிடம்...

நாமக்கல் கருங்கல்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்: நாமக்கல் எம்பி., வி.எஸ்.மாதேஸ்வரன் மத்திய அமைச்சர் கட்கரியிடம் நேரில் வலியுறுத்தல்

நாமக்கல் கருங்கல்பாளையம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என மத்திய மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரியை டெல்லியில் நேரில் சந்தித்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் மனு அளித்துள்ளார். பொம்மைகுட்டைமேடு மற்றும் கருங்கல்பாளையத்தில் அமைய உள்ள மேம்பாலம் மற்றும் பொம்மைகுட்டைமேடு முதல் செல்வம் கல்லூரி வரை இணைப்பு சாலை நிர்வாக அனுமதி வழங்கிய நிலையில் உடனடியாக ஒப்பந்தம் கோருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், நிதி அமைச்சகத்திடம் உடனடியாக நிதியை விடுவித்து ஒப்பந்தம் கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் விரைவில் பணிகள் துவங்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!