ராசிபுரம் நகர பாமக சார்பில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 87-வது பிறந்த தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற விழாவில், நகர பாமக செயலர் கு.கந்தசாமி தலைமை வகித்தார். நகர பொருளாளர் வசந்தி வரவேற்றார். நகரத் தலைவர் பூக்கடை கி.மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்கள் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ. மோகன்ராஜ், மாவட்டத் தலைவர் பொன். முருகேசன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் திருப்பதி ஆகியோர் பங்கேற்று கேக் வெட்டி கொண்டி மகிழ்ந்தனர். பின்னர் பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கட்சியின் நிர்வாகிகள் கணேசபாண்டியன், கணேசன், மாரியப்பன், வன்னியரசு, குமார், இளங்கோ, வ.மாணிக்கம் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.