ராசிபுரம் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனப் போக்குவரத்துறையினர் நடவடிக்கை வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.

ராசிபுரம் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு பாதையில் மேம்பாலத்தின் கீழ் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நாமக்கல், ராசிபுரம் போன்ற பகுதியில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான பேருந்துகள் நிற்காமல் மேம்பாலத்தின் மேல் சென்று விடுவதால் அப்பகுதி பயணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் உள்ளது. இதனையடுத்து அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்ததன் பேரில், ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவின் பேரில், ராசிபுரம் மோட்டார் போக்குவரத்து வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார், பறக்கும் படை போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் தணிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து தேங்கல்பாளையம் பிரிவு பாதை வழியாக செல்லாமல் மேம்பாலம் வழி்யாக பேருந்தினை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்து மேல்நடவடிக்கைக்காக ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அனைத்து பேருந்துகளும் தேங்கல்பாளையம் பிரிவு பாதை வழியாக செல்லவேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக ராசிபுரம் மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் ஏ.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.