ராசிபுரம் பகுதியில் செயல்படும் உணவகங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் டெலிவரி செய்யும் பல்வேறு நிறுவனங்கள் ஸ்விக்கி, சோமேட்டோவிற்கு மாற்றாக ZAAROZ என்ற புதிய செயலியை (APP) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து செயலியை அறிமுகம் செய்து வைத்தனர். இந்த செயலி மூலம் அனைத்து வகையான உணவுகள், மருந்துகள், காய்கறி, இறைச்சிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஹோட்டல் விலைக்கு டெலிவரி வழங்கப்படும் என ZAAROZ செயலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாமக்கலில் கடந்த சில கடந்த சில தினங்களுக்கு முன்பு swiggy, zomato உள்ளிட்ட உணவு செயலியில் மறைமுகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அந்த செயலிகளுக்கு உணவு வழங்காமல் வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கலில் உணவு டெலிவரிக்காக ZAAROZ என்ற புதிய மொபைல் ஆப் துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் ZAAROZ என்ற புதிய ஆப் அறிமுகம் செய்யும் நிகழ்வானது நடைபெற்றது. ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து புதிய ஆப்பை ராசிபுரம் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் அறிமுகம் செய்து டெலிவரி வாகனத்தை துவக்கி வைத்தனர். இனி நுகர்வோர் இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம் என உணவக உரிமையா்ளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ZAAROZ செயலியின் CEO ராம் பிரசாத் கூறுகையில், உணவு டெலிவரி நிறுவனங்கள் 35 சதவீத வரை கமிஷன் எடுத்துக் கொள்வதாக உணவக உரிமையாளர்கள் குற்றச்சாட்டு வைத்த நிலையில் டெலிவரிக்கு ZAAROZ என்ற புதிய செயலியை இனி பயன்படுத்த போவதாக தெரிவித்தார். ZAAROZ என்ற உணவு டெலிவரி செயலில் மறைமுகமாக கட்டணம் கிடையாது. பிற செயலியை விட 30 சதவீத குறைவான கட்டணத்தில் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம். உணவு டெலிவரி செய்யும் நபர்களுக்கு எவ்வித சிரமம் இன்றி ஆப் நிறுவனம் சார்பில் எலக்ட்ரிக் ஸ்கூட்டி, அனைத்து வசதிகளும் செய்து வருவதாகவும், இந்த செயலி மூலம் உணவு மட்டும் அல்லாமல் காய்கறி,மருந்து,பழங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும். செயலி தொடங்கப்பட்டு 7 வருடங்கள் கடந்து விட்டதாகவும் இந்த செயலி தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது கொங்கு மண்டலத்தில் நாமக்கலில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டதாகவும் ராம்பிரசாத் தெரிவித்தார்.