Saturday, August 30, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ராசிபுரம் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ராசிபுரம் இன்னர்வீல் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இச்சங்கத்தின் 2025-26-ஆம் ஆண்டின் தலைவராக வழக்குரைஞர் என்.சிவலீலஜோதி, துணைத் தலைவராக சாகிதாபானு மஸ்தான், உடனடி முன்னாள் தலைவராக சுதாமனோகரன், செயலாளராக மகாலட்சுமி ராஜா, பொருளாளர் ஸ்ரீதேவி ராஜேஸ், பன்னாட்டு சங்க ஒருங்கிணைப்பாளராக ஹேமலதா வினோத்குமார், நிர்வாகக்குழு இயக்குனர்களாக தெய்வானை ராமசாமி, ஜெயலட்சுமி ரங்கராஜன், சுகன்யா நந்தகுமார், பத்மாவதி தேவதாஸ், குணசுந்தரி ராமகிருஷ்ணன், மல்லிகா வெங்கடாஜலம், எடிட்டராக அமலா கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் தலைவர் இ.என்.சுரேந்திரன் பங்கேற்று பல்வேறு சேவை திட்டங்கள் குறித்துப் பேசினார். தலைமை விருந்தினராக நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் எம்.ஏ.சரண்யா பங்கேற்று, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும், போக்சோ சட்டம், போதைப்பொருள் புழக்கம், அதன் பயன்பாடு தடுப்பதன் அவசியம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார். விழாவில் சங்கத்தின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. முன்னாள் தலைவர் சுதாமனோகரன் புதிய தலைவர் வழக்குரைஞர் என்.சிவலீலஜோதியை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். பின்னர் புதிய நிர்வாகிகள் பதவியேற்று ஏற்புரை நிகழ்த்தினர். விழாவில் வி.நகர், காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியின் மாணவர்களுக்கு நோட்டுகள், சீருடை, செளரிபாளையம் இல்லத்தின் முதியோர் இருவருக்கு வாக்கர்கள், தொ.ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 20 மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள், குருசாமிபாளையம் பள்ளிக்கு மரக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி, இன்னர் வீல், அரிமா சங்கத்தை சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!