தமிழக வெற்றி கழக ம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் 51வது பிறந்த தினவிழா ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. ராசிபுரம் 4-வது வார்டு கிருஷ்ணன் தெரு பகுதியில் விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் இளைஞர்கள் பலரும் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் சிறுவர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதே போல் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாவில் கட்சியினர் பலரும் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர்.
தவெக விஜய் பிறந்த தினம் கொண்டாட்டம்
RELATED ARTICLES