ராசிபுரம் எஸ்.ஆர்.வி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவியர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவியர் வி.மோனிஷா, ஆர்.திவ்யாசுனந்தா ஆகிய இருவரும் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். மாணவி வி.மோனிஷா தமிழ் பாடத்தில் 100-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் ஆர். திவ்யசுனந்தா ஆங்கிலத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், பள்ளியின் பிற மாணவியர் கணிதம், வேதியியல் பாடத்தில் தலா 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவியர்கள் 6 பேர் கணினி அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 40 மாணவர்கள் 500க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவியர்களை பள்ளியின் செயலர் மற்றும் தாளாளருமான ஆர் மனோகரன், தலைவர் டாக்டர் இ.தங்கவேல், நிர்வாக அறங்காவலர் ஆர்.துரைசாமி, அறக்கட்டளை பொருளாளர் கே.என். எஸ்.சுப்பிரமணியம் பள்ளியின் இயக்குனர் பி.வஜ்ரவேல், தலைமையாசிரியர் ஏ.ஆரோக்கியதாஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சிறப்பிடம்
RELATED ARTICLES