நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் சார்பில் ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்க நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் சார்பாக ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஆசிரியர் திறன் மேம்பாடு பலமிகு ஆதரவாளர்கள் என்னும் விருது வழங்கப்பட்டது.ரோட்டரி, இன்னர் வீல் சங்கத்தின் கல்வி சார்ந்த திட்டங்களை அரசு பள்ளிகளுக்கு வழங்கியதை பாராட்டும் வகையிலும், பல்வேறு சமுதாய சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழாவில் வெள்ளக்கல்பட்டி ஆசிரியர் பி.சுந்தரம் தலைமை வகித்தார். ஆசிரியை ப.சுமதி வரவேற்றார். பெரியமணலி தலைமையாசிரியை உமாமகேஸ்வரி, சரஸ்வதி, ஏ.செந்தில்வெங்கடாசலம், ந.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் மு.செல்வம் விழாவில் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். முன்னதாக ஆசிரியர் தே.சதீஸ் விழாவினை தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியரை கார்த்தியாயினி நன்றி கூறினார்.
விழாவில் விருது பெற்ற ரோட்டரி நிர்வாகிகள் விவரம்: எம்.முருகானந்தம், கே.ராமசாமி, பி.கே.ராஜா, கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், டி.பி.வெங்கடாஜலபதி, எல்.சிவக்குமார், என்ஜினியர் இ.என்.சுரேந்திரன், எல்.லட்சுமிபதி, ஆசிரியை கு.பாரதி. இன்னர்வீல் நிர்வாகிகள்- தெய்வானை ராமசாமி, சுதாமனோகரன், சிவலீலாஜோதிகோபி, ஆர்.சுதாரமேஷ்.