ராசிபுரம் அருகேயுள்ள மூலப்பள்ளிப்பட்டி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் முகாமில் பங்கேற்று 334 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக பொதுமக்கள் அரசு அலுவலகங்களை தேடி தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வந்த நிலையில், பொதுமக்களை தேடி அனைத்து துறை அரசு அலுவலர்களும் அவர்களது கிராமங்களுக்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட மாதம் ஒரு முறை மக்கள் தொடர்பு திட்ட முகாமினை நடத்திட உத்தரவிட்டுள்ளார். இம்முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா, தொழில் கடனுதவி, கூட்டுறவு துறை சார்பில் கடனுதவி, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்படி நடைபெரும் முகாமில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமுகநலத்துறை, மகளிர்திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தாட்கோ மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட 14 அரசுத் துறைகளின் சார்பில், இலவச வீட்டுமனை பட்டா, இ.பட்டா, நத்தம் பட்டா மாறுதல் ஆணைகள், நத்தம் தோராய பட்டா, தையல் இயந்திரம், தொழில் கடன் உட்பட பல திட்டப்பணிகளுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இம்முகாமில் 334 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும், பெண்களை பொருளாதார ரீதியாக உயர்த்திடும் வகையில் மகளிருக்கு மாதம் ரூ.1,000/-வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வழங்கி வருகிறது அரசு. மேலும், விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாத காலத்திற்குள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா இலவச விடியல் பயணம், உயர்கல்வி பயில வறுமை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் உடல்நலனையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக, கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ், ரூ.16.65 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை அவர் திறந்து வைத்தார். முன்னதாக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து அனைத்துத்துறை கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார். தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிச் திட்டம், வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை,வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் ஆர்.இரவீந்திரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி,ராசிபுரம் வட்டாட்சியர் சு.சசிக்குமார் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.