Thursday, April 17, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்விபத்தில் அரசுப் பள்ளி விலங்கியல் ஆசிரியர் உயிரிழப்பு - ஆசிரியர்கள் இரங்கல்

விபத்தில் அரசுப் பள்ளி விலங்கியல் ஆசிரியர் உயிரிழப்பு – ஆசிரியர்கள் இரங்கல்

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் அரசு பள்ளியின் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் விலங்கியல் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தனசேகரன் (50). செல்லப்பம்பட்டி பகுதியை சேர்ந்த இவர் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

இவர் வெண்ணந்தூர் அருகேயுள்ள பழந்தின்னி்ப்பட்டி பகுதியில் செல்லும் போது எதிரே நிலைதடுமாறியபடி வந்த ஆட்டோ இவர் மீதும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற சசிக்குமர் என்பவர் மீதும் மோதியது. இதில் ஆசிரியர் தனசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சசிக்குமார் என்பவர் பலத்த காயத்துடன் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த ஆசிரியர் தனசேகரன் சடலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவரது மனைவி நித்யா கொளத்துப்பாளையம் பள்ளியில் ஆசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கு காரணமாக எடப்பாடி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் சரவணன் என்பவரிடம் வெண்ணந்தூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு இதே பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ஜெயபாலன் என்பவர் மக்களவைத் தேர்தல் பணி பயிற்சிக்கு சென்று திரும்பிய போது காளப்பநாயக்கன்பட்டி அருகே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!