காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி Degree (அ) 12-ம் வகுப்பு தேர்ச்சி/ Intermediate (10 + 2) and experience of working as MPW/LHV/ANM/Health worker/ Certificate or higher course in Health Education/ Counselling (m) Tuberculosis health visitor’s recognized course சான்றிதழ் மற்றும் இதனுடன் கணிணி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும். (MS Word, Excel, Simple Statistical Packages). காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ரூ.13300.00 ஆகும். மேற்கண்ட பணியிடத்திற்கு வயது வரம்பு 65க்குள் இருக்கவேண்டும்.
தகுதி உள்ள நபர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ் நகலுடன் தங்கள் புகைப்படத்தினையும் இணைத்து துணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பழைய வளாகம், மோகனூர் சாலை, நாமக்கல் 637001 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25.04.2025 மாலை 05.00 மணிக்குள்.
மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் உள்ள அலுவலக தகவல் பலகையில் அறிந்து கொள்ளலாம். அல்லது 04286 – 292025 என்ற அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானதாகும். எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேர்வதற்கான சுயவிருப்பு ஒப்புதல் (Undertaking) கடிதம் அளிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் எந்த இடத்தில் பணியமர்த்தினாலும் பணிபுரிய வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முக தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் கடிதம் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதும், நிராகரிக்கப்படுவதும் மாவட்ட நலச்சங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்டது என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, தெரிவித்துள்ளார்.