ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் அம்மன் திருக்கோவிலின் புதியத் தேர் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கடந்த 2022 செப்டம்பரில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. ராசிபுரம் கொங்கு நாட்டு வேளாளர் விழியன் குல பங்காளிகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரின் குலதெய்வமான இக்கோவில் தேர் பொதுமக்கள் உதவியுடன் 42 அடி உயரத்தில் தேக்கு மரத்தில் புதியதாக வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. இத்தேர் இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் வெள்ளோட்ட நிகழ்ச்சி் நடத்தப்பட்டது. இதில் அத்தனூர் அம்மன் திருக்கோயில் நிர்வாக அலுவலர் சிவகாமி முன்னிலை வகித்தார். அருள்மிகு அத்தனூர் அம்மன் விழியன் குல பங்காளிகள் நல அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் வி.நடராஜன், செயலர் பொியசாமி, பொருளாளர் பொியசாமி, அறக்கட்டளைப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து, புதிய தேர் வெள்ளோட்டத்தினைச் நடத்தினர். முன்னதாக திருக்கோயிலில் யாக வழிபாடுகளும் பிரம்மோற்சவ, கால்கோள் விழா சிவாச்சாரியர்களால் நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கும்பம் திருத்தேரில் வைக்கப்பட்டு, கோவிலை சுற்றி திருத்தேர் வெள்ளோட்டமாக வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் சிவகாமி, விழியன் குல அறக்கட்டளை கௌரவத் தலைவர் முத்து இராமசாமி, எஸ்ஆர்வி ஏ.ராமசாமி, தலைவர் ஆடிட்டர் நடராஜன், செயலர் பெரியசாமி, பொருளாளர் கே. பெரியசாமி முத்தாயம்மாள் ஆர். முத்துவேல் ராமசாமி, சென்னை நடன சபாபதி, சேலம் சந்திர மூர்த்தி IRS., USA., அரிசோனா மாநிலம், தியாகராஜன், தலைவாசல் சின்னத்துரை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆத்தூர் சண்முகம், பழனி ஆண்டவர் முத்துலிங்கம், ஏ.எம்.ஆர்.கருணாநிதி, சந்திரன், குமார், சக்தி, கோடீஸ்வரன், அம்மன் மணி, முல்லைவாடி சேகர், காமக்காபாளையம் ரமேஷ், வெள்ளாளப்பட்டி செந்தில், தலைவாசல் ஆறுமுகம், பெரியசாமி, கள்ளக்குறிச்சி முத்துக்குமார், கணியாமூர் கைலாசம், மலையாளப்பட்டி பிரகாசம் உள்ளிட்ட அறக்கட்டளையின் உறுப்பினர்கள் செய்திருந்தனர். விழியன் குல பங்காளிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு சமூகத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். தேரோட்டத்தின் போது பக்தர்களும், பொதுமக்களும் கலந்துக் கொண்டு ஓம் சக்தி, பராசக்தி, ஓம் சக்தி, மகா சக்தி என்று கோஷம் எழுப்பி அம்மன் திருத்தேர் வெள்ளோட்டத்தினை நிறைவு செய்தனர்.