Tuesday, April 8, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல் மாவட்டத்தில் 127 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் 127 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 127 அங்கன்வாடி பணியாளர்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கென 23.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் துறையின் மூலம் அனுப்பப்படும் போது ஏற்படும் கால தாமதங்களுக்கு துறை பொறுப்பாகாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

தொகுப்பூதிய விவரம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர். குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் தொடர்ந்து 12 மாத கால பணியினை முடித்தபின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர்.

ஊதிய விவரம் அங்கன்வாடி பணியாளர் குறு அங்கன்வாடி பணியாளர் அங்கன்வாடி உதவியாளர் தொகுப்பூதியம் மாதமொன்றுக்கு ரூ.7,700/- ரூ.5,700/ ரூ.4,100/- 12 மாத காலத்திற்கு பின் வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.7700 – 24200 என்ற விகிதம் ரூ.5700 – 18000 என்ற விகிதம் ரூ.4100 – 12500 என்ற விகிதம் தகுதிகள் இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
வ.எண். பொருள் அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி உதவியாளர் அங்கன்வாடி உதவியாளர்

  1. கல்வி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
  2. தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  3. வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின் படி, கணக்கிடப்பட வேண்டும் 25 முதல் 35 வயது வரை

விதவைகள் / ஆதரவற்ற பெண்கள்/எஸ்சி/எஸ்டி வகுப்பினர் வயது 25 முதல் 40 வரை (35+5=40)

மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரை (35+3=38) 20 வயது முதல் 40 வரை

விதவைகள்/ ஆதரவற்ற பெண்கள்/எஸ்சி/எஸ்டி வகுப்பினர் 20 வயது முதல் 45 வரை (40+5=45)

மாற்றுத்திறனாளிகளுக்கு 20 முதல் 43 வயது வரை (40+3=43)

  1. தூர சுற்றளவு காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவர். அதே கிராம ஊராட்சிக்குட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
    காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு (அல்லது) அருகிலுள்ள வார்டு (அல்லது) மைய அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்துக் கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பித்தினை பூர்த்திசெய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம் (Block / Project) குழந்தை வளர்ச்சி திட்ட அலுவகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய் / தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!