Thursday, April 3, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் அருகே 5-ம் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் பாரம்பரியமான சிலம்பாட்டம் விழிப்புணர்வு நிகழ்வு

ராசிபுரம் அருகே 5-ம் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் பாரம்பரியமான சிலம்பாட்டம் விழிப்புணர்வு நிகழ்வு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் அருகே தமிழ்நாடு ஐந்தாம் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட தலைவர் சிலம்பாட்ட பயிற்சியாளர் நெப்போலியன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது முன்னதாக சிலம்பாட்டம் பள்ளி மாணவ மாணவிகள் மாநிலத் தலைவர் பாண்டியன் தலைமையில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணவு ஏற்படுத்தினர்.

பின்னர் தமிழ்நாடு ஐந்தாம் சங்க மாநிலத் தலைவர் பாண்டியன் பொது கூட்டத்தில் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும் தற்காப்பு கலையான சிலம்பாட்டத்தை பற்றியும் எடுத்துரைத்தார். பின்பு பள்ளி மாணவ மாணவியர்கள் சிலம்பாட்ட தனி திறமைகளை ஒருவருக்கொருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு அவர்களின் தனித் திறமைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டினார் இந்நிகழ்வில் ஐந்தாம் சங்க மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நிகழ்வில் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!