மத்திய அரசின் தேசிய தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பான அகமதாபாத் சேர்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் -அசஞ்சர் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஒரு மாத கால தொழில் முனைவோர் பயிற்சி உடன் கூடிய திறன் பயிற்சியான துணி, சணல் பொருட்களில் இருந்து தையல், லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், மணி பர்ஸ், பைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பிற்கான பயிற்சியை 50 மகளிருக்கு வழங்கியது. இப்ப பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் முனைவர் S.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாட்கோ மேலாளர் ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி முடித்த மகளிர்க்கு தமிழக அரசின் பல்வேறு மானியத்துடன் கூடிய தொழில் திட்டங்களை பயன்படுத்தி தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதில் பேசிய திட்ட அலுவலர் S.ஜெய்சங்கர் பெண்கள் சுய தொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைவதன் மூலம் சமூக நிலைப்பாடுகளில் சமநிலையை அடைய முடியும். இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டு நிறுவனம் அசெஞ்சர் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சி தொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். பெண்கள் தொழில் தொடங்க சமூக ஊடக- டிஜிட்டல் மார்க்கெட்டிங் மிகப்பெரிய வாய்ப்பு அளிப்பதாகவும் இதனை பயன்படுத்தி பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். முடிவில் தேவசேனா நன்றி கூறினார்.