குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணி, தொகுதி பொறுப்பாளர் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு பங்கேற்றனர். தங்கமணி பேசியதாவது:
பூத் கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பெண்கள் வீடு வீடாக, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி பொதுமக்களை அ.தி.மு.க. வெற்றி பெற வாக்களிக்க வசிக்க வேண்டும். அதே போல் பூத் கமிட்டியில் உள்ள ஆண்கள், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபர்கள் குறித்து அறிந்து, அதில் யாராவது வெளியூரில் இருந்தால், அவரை வரவழைத்து நமக்கு வாக்களிக்க வைக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் அயராது பாடுபட வேண்டும். புதைவட மின் பாதை பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் வந்தது. அதனால் பணிகள் பாதியில் நின்றது. தற்போது மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், மீண்டும் பணிகள் துவங்கி முழுமையாக செய்து முடிக்கப்படும் என பேசினார்.