நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் பேளுக்குறிச்சி ஊராட்சிக்கு சம்பந்தப்பட்ட நரசிம்மன்புதூர் கரட்டு அடிவாரத்தில் கடந்த மூன்று வருடத்திற்கு மேல் சட்ட விரோதமாக அனுமதியின்றி மண்வெட்டி கடத்தப்பட்டு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை தட்டிக்கேட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். நரசிம்மன்காடு பகுதியில் சுமார் 30 அடி ஆழத்திற்கு குழி தோண்டி ஜேசிபி எந்திரம் பயன்படுத்தி மணல் அள்ளப்பட்டுள்ளதால், பெரும் கனிம வளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு மணல் கடத்திச்சென்ற அப்பகுதியை சேரந்த ஆளும் கட்சியினர் சிலருக்கும், டிப்பர் லாரி அசோசியேசன் உரிமையாளர்களுக்கும்- இளைஞர்கள் சிலருக்கும் இடையே தகராறு, மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் சிலரும் அந்த சம்பவ இடத்திற்கு சென்று மணல் கடத்தில் குறித்து தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது இதனை இளைஞர்கள் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்கள் வெளியிட்டதால் ஆளும் கட்சியினர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்களாம். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் திமுக நிர்வாஙிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் எங்களுக்கு சரியான பாதுகாப்பு வேண்டியும் பாஜக – சேர்ந்த ஒன்றியத் தலைவர் பாண்டியன் தலைமையில், முன்னாள் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பேளுக்குறிச்சி காவல் நிலையம் சென்று காவல் உதவி ஆய்வாளரிடம் புகார் அளித்தனர்.

இரவு நேரங்களில் ஜேசிபி.,ஹிட்டாச்சி பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தட்டிக்கேட்ட எங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கொள்ளையை தடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளனர்.