நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் பகுதியில் உள்ள இடுகாட்டில் 6 மண்டை ஒடுகளும், மாந்தீரக பொருட்களும் இருந்த நிலையில், இது குறித்து தடயவியல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் இடுகாட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இடுகாட்டில் 6 மனித மண்டை ஓடுகள் எரிந்த நிலையிலும், அருகில் அரிவாள், ஆணி, மாந்திரீகம் படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில மருத்துவமனை குறிப்புகளும் அப்பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிலையில் இடுகாட்டில் இருந்த நபர்கள் புதுச்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுசத்திரம் காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சேலத்தில் இருந்து தடயவியல் கால்துறையினரும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
ஒரே இடத்தில் 6மனித மண்டை ஓடுகள் இருந்து நிலையில் வேறு பகுதியில் கொலை செய்யப்பட்ட மண்டை ஒடுகள் இப்பகுதியில் வீசி சென்றனரா? அல்லது மாந்திரீகம் செய்வதற்காக இடுகாட்டில் இருந்து பிணத்தின் மண்டை ஒடுகள் எடுத்து மந்திரவாதிகள் பூஜை செய்தனரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் நாமக்கல் காவல்துறை உதவி ஆணையர் ஆகாஷ் ஜோஸி உள்ளிட்ட காவல்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.