Friday, April 4, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் பகுதியில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: தலைமறைவான நிலபுரோக்கர் சங்கர்...

ராசிபுரம் பகுதியில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: தலைமறைவான நிலபுரோக்கர் சங்கர் மீது மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் புகார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் சுருட்டிக்கொண்டி குடும்பத்துடன் தலைமறைவான நிலபுரோக்கர் சங்கர் என்பவர் மீது பணத்தை பறிகொடுத்து ஏமாந்த நிற்கும் பாதிக்கப்பட்டோர் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ராசிபுரம் பட்டணம் சாலை மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர் சங்கர் (44), இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடையும் நடத்தி வந்தார். மேலும் இவர் வீடு, நிலம், வாங்கி விற்கும் இடைத்தரகர் வேலையும் செய்து வந்த நிலையில். பல ஆண்டுகளாக தீபாவளி பலகார சீட்டு, மற்றும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என ஏல சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இவர் இந்த தொழில் செய்து வந்த நிலையில் இவரை நம்பி ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 150-க்கும் மேற்பட்டோர் இவரிடம் தீபாவளி பலகார சீட்டும் ,ஒரு லட்சம், இரண்டு லட்ச ரூபாய் சீட்டு போட்டு பணம் கட்டி வந்தனர்.

இவர் பொதுமக்கள் இருப்பிடத்திற்கு சென்று பணம் வாங்கி வரவு செலவு செய்து வந்த நிலையில் இவர் கடந்த ஒரு மாத காலமாக யாரிடமும் பணம் வாங்க வீட்டிற்கு வராமலும் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொது மக்களுக்கு இவர் தலைமறைவான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பணம் கொடுத்தவர்கள் அவரை தொடர்பு கொண்ட போது முறையாக பதில் இல்லாததால் இவரின் வீட்டிற்கு வந்து கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாக சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ளமுடியவில்லையாம். உறவினர்களும் எங்கு சென்றார் என தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஏமாந்தவர்கள் ஏராளம்:

இவரிடம் பலரும் பல லட்சம் ஏமாந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பலர் ராசிபுரம் காவல் நிலையத்திலும், மற்றும் பலர் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் மனு வழங்கியுள்ளனர்.

மேலும் இவரைப் பற்றி விசாரிக்கும் போது பல்வேறு பொதுமக்களிடமும், பைனான்ஸ் போன்ற இடங்களில் ஒரு கோடிக்கு மேல் பண மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ராசிபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கார் லோன் ரூ.4 லட்ச ரூபாயும் வாங்கி கட்டாமல், காருடன் தலைமுறைவாகினார். ஏமாற்றுப் பேர்வழி சங்கர் என்பவரை பலரும் தேடி வருகின்றனர். குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள இவரை காவல்துறை விரைந்து விசாரித்து கண்டுபிடித்து ஏமாந்தவர்களுக்கு நி்வாரணம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். காரின் ஃபாஸ்ட் டாக், ஏடிஎம் கார்டு, மொபைல் போன் போன்றவற்றை கண்டறிந்து அவற்றின் உதவியுடன் விரைந்து கண்டுபிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!