நாமக்கல் மாவட்ட காவலர் பல் பொருள் அங்காடியில் 3- க்கு 1 என்ற விகிதாச்சார அடிப்படையில், காவல்துறையில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளின் வேலை இல்லாத மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தகுதி வாய்ந்தோர் ரூ.15,000 மாத ஊதியத்தில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 45 குள் இருக்க வேண்டும். எவ்வித குற்ற பின்னணியும் இருக்கக் கூடாது. எந்த அமைப்பிலோ, அரசியல் கட்சி சார்ந்தவராகவோ இருக்கக் கூடாது. விண்ணப்பதாரர்கள் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 24.3.25 முதல் 28.3.25 வரை காவல் துணை கண்காணிப்பாளர் ஆயுதப்படை, அலுவலகத்தில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபாலம் மூலமாகவோ காவல் துணை கண்காணிப்பாளர் ஆயுதப்படை அலுவலகத்தில் வரும் 28.3.25ஆம் தேதி மாலை 5 மணிக்குள ஒப்படைக்க வேண்டும்.ஆட்கள் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பள்ளி கல்லூரி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.